support@sseriesindia.com+91(82700) 54588
HomeBlogAbout UsBusinessAgricultureAstrologyGeneral InformationContact Us

New blog posts

இன்றைய கணவன் மனைவி உறவு
இன்றைய கணவன் மனைவி உறவு

15 June, 2022 by Administrator

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி...

Starting Export Import Business Guidelines
Starting Export Import Business Guidelines

3 June, 2022 by Administrator

Starting Export Business Guidelines Guide...

இதயம் காக்கும் உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்

3 June, 2022 by Administrator

இதயத்திற்கு இதமான உணவு பழக்கவழக்கங்களை...

சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்
சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்

3 June, 2022 by Administrator

உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று...

View all blog entries →

sseriesindia.com

தங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். Whatsappஇந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

  Posted on 20 April, 2022 by Administrator

  இந்த 5 விஷயங்களை கடைபிடித்து வந்தால் உங்கள் வீட்டில் பணம் பல வழிகளில் இருந்தும் வந்து கொண்டே இ?

  பணம் சேர வழிகள் | Veetil panam sera Tamil | Aanmeega Tips

  இன்று எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிரதானமாக இருக்கும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனையாக தான் இருக்கும். குடும்பத்தில் வருமானம் குறைவு, வேலையின்மை, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் வருமானம் குறைந்து போகிறது. இதனால் பண வரத்து தேவையான அளவிற்கு இருப்பது இல்லை. இத்தகைய சூழ்நிலையை மாற்றி அமைக்கக் கூடிய அற்புதமான 5 சக்தி வாய்ந்த எளிய குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

  குறிப்பு 1: வாழ்க்கையில் வருமான குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக காலையில் முதல் வேலையாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பழகுவது நல்லது. அல்லது சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து சூரியன் உதயமாகும் பொழுது சூரிய நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். ஜாதகத்தில் சூரிய பகவான் முதன்மையாக விளங்குகின்றார். இதனால் அவருடைய உதயத்தின் பொழுது நமஸ்காரம் செய்பவர்களுக்கு எத்தகைய தடைகள் இருந்தாலும் விலகும் என்பது ஐதீகம்.

  குறிப்பு 2: பணம் பெருகுவதற்கு வீட்டில் கண்டிப்பாக காலை நேரத்தில் விளக்கு ஏற்றுவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். பூஜை அறைக்கு சென்று கீழே அமர்ந்து கொண்டு உங்களுடைய இஷ்ட தெய்வத்தின் உடைய படத்தின் முன்பு மண் அகல் விளக்கு அல்லது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும். சாணத்தால் செய்த தீபம் அல்லது பஞ்ச கவ்யத்தால் செய்த தீபம் போன்றவற்றை ஏற்றுவது சிறப்பு! தீபம் ஏற்றும் பொழுது உங்கள் மனதிற்கு பிடித்த மந்திரங்களை 9 முறையாவது உச்சரிக்க வேண்டும். இதனால் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அகன்று, நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கத் துவங்கும்.

  pachai-karpooram1

  குறிப்பு 3: தெய்வீக ஆற்றல் படைத்துள்ள பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கக் கூடிய தன்மை உண்டு. பச்சைக் கற்பூரத்தின் வாசம் வீடு முழுவதும் இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளத்துக்கு குறைவிருக்காது. எனவே பச்சை கற்பூரத்தை பூஜை அறை, பணம் வைக்கும் இடங்கள், தீர்த்த பாத்திரங்கள் போன்றவற்றில் சிறிதளவு போட்டு வைப்பது நல்லது. மேலும் எப்பொழுதும் விளக்கு ஏற்றும் போது பச்சை கற்பூரத்தை தூள் செய்து விளக்கினுள் சிறிது போட்டு ஏற்றினால் தெய்வீக மணம் கமழும். இதனால் தெய்வத்தினுடைய அனுக்கிரகம் எளிதாக கிடைக்கும். வீடு மட்டுமல்லாமல் தொழில் செய்யும் இடங்களிலும் பச்சை கற்பூரத்தின் வாசம் இருந்தால் அங்கு பணம் பெருகும், வருமானம் அதிகரிக்கும்.

  குறிப்பு 4: வருமான தடைகள் நீங்கி செல்வ வளம் மற்றும் பண வரவு அதிகரிக்க தினமும் முன்னோர்கள் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக குலதெய்வ படத்தை வைத்து அதற்கு முன்பாக ஒரு கலசத்தை வைத்து கொள்ள வேண்டும். மண் கலசம் அல்லது பித்தளை செம்பு போன்ற உலோகங்களால் செய்த கலசத்தை எடுத்து வைத்து, அதில் தண்ணீரை கழுத்து அளவிற்கு நிரப்பி அதில் சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசியை பரப்பி அதன் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மனதார உங்களுடைய பிரார்த்தனைகளை கூறினால் நினைத்தது நடக்கும்.

  dhanam

  குறிப்பு 5: பண வரவு மற்றும் செல்வ வளம் அதிகரிக்க எப்பொழுதும் பொது நலத்துடன் இருக்க வேண்டும். ஆணவம், அகங்காரம், கர்வம், தலைக்கனம் ஆகியவற்றை ஒழித்துக் கட்டி விட வேண்டும். சுயநலமாக இருப்பவர்கள் கையில் பணமானது எவ்வளவுதான் வந்தாலும் அது வந்த வழியே சென்று கொண்டே இருக்கும். வருமானம் பெருகி, கிடைக்கக்கூடிய பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பகுதியை கண்டிப்பாக ஏழை, எளியவர்களுக்கு அல்லது வாயில்லா ஜீவராசிகளுக்கு தானம் செய்ய வேண்டும். எனவே தினமும் தானம் செய்யும் பழக்கத்தை கடைபிடித்து பாருங்கள்.

   


  Comments