கிசான் கடன் அட்டைகளின் வாயிலாக பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் கடன் பெறும் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் ரூ. 2 லட்சம் கோடி கடனுதவி பெற்று பயனடைவார்கள்.
பயன்கள்
- இந்த கால்நடை உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்கள் எந்த அடமானமும் இல்லாமல் வங்கியிலிருந்து ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை கடனாக பெறலாம்
- இந்த கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
கடன் தொகையை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டியினை மத்திய அரசு மானிய மூலம் வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாக குறையும். - கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்
யாரை அணுக வேண்டும்
இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய / சேமிப்பு கணக்கு உள்ள வங்கி கிளையை அணுகவம்