ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியுதவிகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 27,87,355 ஆதிதிராவிட மாணாக்கர் கல்வி பயின்று வருகின்றனர். (ஆதாரம்- ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை).
இம்மக்களை கல்வியில் நிலையான முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு, ஆதி திராவிட மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில், 138 பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளின் விபரம் அறிய, இங்கு கிளிக் செய்யவும்
பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் சலுகைகள்
மேலும் தகவல் அறிய : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினார் நலத்துறை