சங்கிலித்தொடர் குளிர்பதன வசதிகளுக்கான திட்டம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்
தனியார் தொழிற்துறை, தொழில் முனைவோர், கூட்டுறவு அமைப்புகள், விவசாய குழுக்கள், PSU—க்கள்.
எப்போதும் விண்ணப்பிக்கலாம்
திட்டமானது தேவை அடிப்பமையிலானதாகும் மற்றும் வருடம் முழுவதும் திட்டத்தின் பலனை பெறலாம்.
எங்கு விண்ணப்பிக்கலாம்
மாநில தோட்டக்கலை இயக்கம் அல்லது தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகங்கள்
உள்ளடங்கும் பாகங்கள்
ப்ரீ – கூலர்களுடன் நவீன பேக் – ஹைவுசஸ், குளிர்சாதான அறைகள், குளிர்சாதன கிடங்குகள், ரீஃபர் கண்டெய்னர்கள், பழுக்கவைப்பதற்கான பிரிவுகள் மாற்று எரிசக்தி, சில்லரை அலமாரிகள், வினியோக வண்டிகள்
நீண்ட தூரம் பயணிக்கும் ரீஃபர் டிரக்
நீண்ட தூரம் பயண சரக்கு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் வெப்பம் உட்புகாத வசதி கொண்ட கேரேஜ் மற்றும் தீவர ரெப்ரிஜிரேட்டடு கூலிங் சிஸ்டம்.
நகர ரீஃபர் வேன்
நகரத்தில் வினியோக வசதிக்காக சாதாரண மற்றும் தீவர குளிர்பதன வசிதியுடன் கூடிய வெப்பம் உட்புகாத வசதி கொண்ட கேரேஜ், நகரங்களுக்கும். விவசாய பண்ணைகளுக்கும் இடையிலான தூரத்தை இணைக்கும் பாலமாக இந்த குளிர்பதன வசதி திட்டம் இருக்கிறது. இதன் மூலம் நுகர்வோர்களுக்கு புத்தம்புதிய விவசாய விளைபொருட்களை சப்ளை செய்ய உதவுகிறது.
வழிகாட்டல் & தரத்திற்கு www.MIDH.gov.in அல்லது www.NCCD.gov.in ஐ பார்க்கவும்.
அதிக தகவல்களுக்கு அருகாமையில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் மாநில தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளவும்.
ஆதாரம் : வோளண், கூட்டுறவு & விவசாய நலத்துறை வேளாண் & விவசாய நல அமைச்சகம், இந்திய அரசு